என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1.
ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர்
உமக்கு நன்றி ஐயா – என்னை
2.
தேடி வந்தீர் பாட வைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா – என்னை
3.
பாவமில்லா தூய வாழ்வு
வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே – என்னை
4.
துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா – என்னை
5.
கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரட்த்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா – என்னை
6.
உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன் – என்னை